‘‘மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நம்ம உள்ளூர்க்காரப் பயலுக்கு ஓட்டு போடுங்கோ" என கிராமத் துப் பாணியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சிவகங்கை அமைச்சர் ஜி.பாஸ் கரனுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவரை சமாதானப்படுத்தி அனுப்பினார் முதல்வர். அதன்பிறகு சிவ கங்கை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கும், மானாமதுரை தொகுதி வேட் பாளர் நாகராஜனுக்கும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று திருப்புவனம் ஒன்றி யத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசி யதாவது:
அதிமுகவில் போட்டியிடும் நம்ம உள்ளூர்க்காரப் பயலுக்குத் தான் நீங்கள் வாக்களிக்கனும். அவருக்கு ஓட்டு போட்டால் இங்கதான் திரிவார். திமுகவில் போட்டியிடும் வெளியூர்க் காரருக்கு ஓட்டு போட்டால் பார்க்க முடியுமா? இதுவரை அவரை இங்கு யாராச்சும் பார்த்திருக் கீங்களா..? முதல்வர் அறிவித்த திட்டங்கள் உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அவரு சொன்னா கண்டிப்பா செஞ்சு டுவாரு. இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பி நாகரா ஜனுக்கு வாக்குச் சேகரித்த அமைச்சரை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago