வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டதை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,148 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,572 கட்டுப்பாட்டு கருவிகள், 2,786 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன. இவை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளில் வேட்பாளர்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை தன்மையை ஏற்படுத்தும் வகையில் தொகுதிக்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 1,000 வாக்குகள் பதிவு செய்து காட்டப்பட்டன. இவை அனைத்தும் அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்