சேலம், நாமக்கல் மாவட்டத்தில் - வாக்குச்சாவடி பணி குறித்து இன்று இறுதிகட்ட பயிற்சி வகுப்பு :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு இன்று நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 1, வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை – 2 மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 3 மற்றும் பணியாளர்கள் ஆகியோர் என 18,832-க்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர்.அவர்களுக்கு, தேர்தல் பணிகள் குறித்து அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே இரு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ளவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி முகாம் இன்று (3-ம் தேதி) நடத்தப்படுகிறது. பயிற்சி முகாமின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தவும் வசதி செய்யப்படுகிறது.

3-ம் கட்ட பயிற்சி

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி பணி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று (3-ம் தேதி) நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற அதே பயிற்சி மையங்களிலேயே மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயிற்சியில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்