தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று இறுதிகட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9,043 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தொகுதிக்கு ஓரிடம் என மொத்தம் 5 இடங்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. மூன்றாம்கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, வருகிற 5-ம் தேதி பயிற்சி மையங்களில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பணி நியமன ஆணை வழங்கப்படும்.
அதை பெற்றுக்கொண்ட பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து, மண்டல அலுவலர்கள் மேற்பார்வையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும். அன்று இரவிலேயே வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, 6-ம் தேதி காலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago