திருநெல்வேலி மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் 51 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் 60 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்து பாதிப்பு 78 ஆக இருந்தது. அதிகபட்சமாக கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ள்ளனர். திருநெல்வேலி மாநக ராட்சி சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகரம்- 37, அம்பாசமுத்திரம்- 6, மானூர்- 17, நாங்குநேரி- 6, பாளையங்கோட்டை- 5, பாப்பாக்குடி- 1, ராதாபுரம்- 3, வள்ளியூர்- 2, சேரன்மகாதேவி- 1.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும் வேண்டும் என்று, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஒருவர் மரணம்
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,749 ஆக உள்ளது.நேற்று 7 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 8,483 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 104 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago