“போராட்டம், தியாகங்கள் நிறைந் தது எனது வாழ்க்கை” என, பிரச்சாரத்தின் போது வைகோ உருக்கமாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு வாக்கு கேட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரம் செய்தார்.
வீரசிகாமணியில் அவர் பேசிய தாவது: வறட்டாறு குப்பத்து ஓடை மீது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமரம் வழியாக தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த சாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசாக, பெரு முதலாளிகளின் அரசாக செயல்படுகிறது. அதனால் தான் அவர்கள் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை கொண்டுவந்துள்ளனர்.
விவசாய விரோத சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் அதிமுக, பாமக எம்.பி.க்கள் வாக்களித்தனர். இந்திய வரலாற்றில் அதிமுகவும், பாமகவும் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டன. பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டம் உட்பட பல்வேறு திட்டங் களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எனது பொது வாழ்க்கை போராட்டங்கள், தியாகங்கள் நிறைந்தது. எனது தாயார் 99 வயதில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து எங்கள் ஊரில் போராட்டம் நடத்தினார். ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்ததால், அதில் இருந்து மூன்றாவது மாதம் இறந்துவிட்டார். கொள்கைக்காக உயிர் கொடுத்த தாயின் மகனான நான் பொதுமக்களுக்காக, நாட்டுக் காக போராடுகிறேன் என்றார் அவர்.
கொள்கைக்காக உயிர் கொடுத்த தாயின் மகனான நான் பொதுமக்களுக்காக, நாட்டுக்காக போராடுகிறேன்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago