திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3,270 பேர் தபால் வாக்குகள் பதிவு செய்து ள்ளனர் என, தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சட்டப் பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விருப்பம் இருந்தால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் திருநெல் வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 3,403 தகுதியுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கு வதற்கும், அந்த வாக்குச் சீட்டுகளை மீண்டும் பெறுவதற்கும் மண்டல அலுவலர் நிலையில் வாக்கெடுப்பு அலுவலர், அவருக்கு உதவியாக மண்டல உதவி அலுவலரும், பாதுகாப்புக்கு காவலரும் நியமிக்கப்பட்டனர். இதை மேற்பார்வையிடுவதற்காக நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இந்த நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவானது கடந்த 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை பெற்றனர். மாவட்டத்தில் மொத்தம் 80 வயதுக்கு மேற்பட்டோர் 3,094 பேருக்கு வாக்குச் சீட்டு படிவங்கள் 12 டி வழங்கப்பட்டிருந்தது. அதில் 2,977 தபால் வாக்குச் சீட்டுகள் பெறப்பட்டிருக்கின்றன. இதுபோல் மாற்றுத்திறனாளிகள் 309 பேருக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 293 வாக்குச் சீட்டுகள் பெறப் பட்டிருக்கின்றன என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago