தி.மலை மாவட்டத்தில் கணினி குலுக்கல் முறையில் - தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலு வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை குலுக்கல் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதி கள் உள்ளன. மேலும், 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 6-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணியில் 13,808 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடை பெற்றுள்ளது. 3-ம் கட்ட பயிற்சி முகாம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், காவல் துறையினர் மற்றும் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பணியிடம் ஒதுக்குவதற்கான கணினி முறை குலுக்கல் நேற்று நடைபெற்றது.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சி யர் சந்தீப் நந்தூரி தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதையடுத்து, பணி ஒதுக்கீடு ஆணை வரும் 5-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்