வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற் காக அரசியல் கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்தால், அதுதொடர்பாக 24 மணி நேரமும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.95 லட்சம் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.95 லட்சத்து 30 ஆயிரத்து 603 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் அடுத்த தெள்ளூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு ரூ.17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல், நேற்று முன்தினம் அரியூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்த இருவர் பிடிபட்ட நிலையில் அவர்களிடம் இருந்து ரூ.1,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 8 பேர் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்
மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 94987-47537 அல்லது 0416-2256618 ஆகிய தொடர்பு எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பறக்கும் படை அலுவலர்களை 94987-47525 (காட்பாடி), 94987-47526 (வேலூர்), 94987-47527 (அணைக் கட்டு), 94987-47529 (கே.வி.குப்பம்), 94987-47531 (குடியாத்தம்) தொகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை 94987-47532(காட்பாடி), 94987-47533 (வேலூர்), 94987-47534 (அணைக்கட்டு), 94987-47535 (கே.வி.குப்பம்), 94987-47536 (குடியாத்தம்) ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 83000-30532 (காட்பாடி), 94987-47522 (வேலூர்), 95144-01332 (அணைக்கட்டு), 96558-36966 (கே.வி.குப்பம்), 83000-30536 (குடியாத்தம்) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago