வீட்டுவசதி வாரிய வீடுகள் சீரமைக்கப்படும் ஈரோடு கிழக்கு தமாகா வேட்பாளர் உறுதி :

By செய்திப்பிரிவு

ஈரோடு சம்பத் நகர் வீட்டுவசதி வாரிய வீடுகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்.யுவராஜா உறுதியளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா போட்டியிடுகிறார். ஈரோடு சம்பத் நகர் பகுதியில் நேற்று வீடு, வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பழுதடைந்துள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை சீரமைத்துத் தர வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் மத்தியில் யுவராஜா பேசும்போது, சம்பத்நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.

மேலும், பெண் வாக்காளர்களிடம் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை, இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்