தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச் சியில் சமநிலை அற்ற தன்மை நிலவு வதால் தென்மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கோவை, திருப் பூர், ஈரோடு போன்ற இரண்டாம் நிலை நகரங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற் பட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்கள், சிறு சிறு நகரங் களையும், கிராமங்களையும் அதிகம் கொண்டவை. சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களைப்போல் தென் மாவட்டங்களில் எந்த ஒரு தொழில் நகரமும் இல்லை. சிறிய அளவிலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கால்நடை வளர்ப்பு, விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகள், ஹோட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்டவைதான் மக்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியதொழில்களாக உள்ளன. மதுரையில் மட்டும் சில ஐ.டி நிறுவனங்கள் உள் ளன. அதிலும் அதிக ஊதியத்தில் வேலை பார்க்கக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பணிபுரியக்கூடிய அளவுக்கு பெரிய வேலைவாய்ப்புகள் இல்லை.
அதனால் புதியவர்களுக்கான பயிற்சி மையமாகவே இந்த ஐடி நிறுவனங் கள் செயல்படுகின்றன. கடந்த சில ஆண்டுளாக மழை பெய்து ஓரளவு விவசாயம் நடந்தாலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயத் தொழிலும் லாபகரமாக இல்லை. அதனால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடு களும், தொழிற்சாலைகளும் ஏற்கெனவே தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், கோவை மற்றும் சேலம் பகுதிகளுக்கே செல்கின்றன. மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில் முதலீடுகள், தொழிற்பேட்டைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு இல்லாததால் படித்த, படிக்காத தென் மாவட்ட இளைஞர்கள், வேலை தேடி சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சமநிலை இல்லை
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘தொழில் வளர்ச்சி தமிழகம் முழுவதும் சமநிலையாக இல்லை. மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களை ஒப்பிடும்போது தென் மாவட்டங்களில் பெரிய தொழிற் சாலைகள் இல்லை. ஒரு பெரிய தொழிற்சாலை அமையும்பட்சத்தில், அதற்கு தேவையான உபகரணங்கள் தயாரித்து கொடுக்க 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாகும். அதுவும் ஓசூர், கோவை, சென்னையில் உள்ளது போன்று மிகப் பெரிய தொழிற்பேட்டைகள் மதுரையில் அமைந்தால் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டமே தொழில்துறையில் ஏற்றம் பெறும். இப்படித்தான் சென்னை, ஓசூர், கோவை, நகரங்கள் வளர்ச்சி பெற்றன.உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் போன்ற மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்கள் வரும்போதுதான் அதனைச் சார்ந்து மற்ற தொழில்கள், மக்கள் வாழ்வாதாரம் மேம்படும். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலத்தை கையகப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றார்.
மதுரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட பாரம் பரிய நகரமாக இருந்தும் இன் னமும் சுற்றுலாவை மட்டுமே நம்பி யிருக்கும் நிலையில்தான் உள்ளது. தற்போது கரோனா மட்டுமல்லாது மீனாட்சியம்மன் கோயிலிலும் தற் போது செல்போன் கட்டுப்பாடு, பாது காப்பு கெடுபிடிகளால் முன்புபோல் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. அதனால் சுற்றுலாப்பயணிகளை நம்பி செயல்படக்கூடிய சாதாரண ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்கள் முதல் சுற்றுலா சேவை நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சினை மதுரையின் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விமான நிலையத்தை மேம்படுத்தவும், தென் மாவட்ட தொழில்துறையை மேம் படுத்தவும் யாரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
மேம்படுத்தப்படாத விமான நிலையம்
மதுரை, ராமேசுவரம், கொடைக் கானல், கன்னியாகுமரியை இணைக்கும் விமானச் சுற்றுலா திட்டம் அறிவித்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையம் இன்னும் சுங்கவரி விமான நிலையமாகவே உள்ளது. துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. 24 மணி நேரமும் இந்த விமான நிலையம் இயங்காததால் பிற நாட்டு விமான சேவைகள் தடைபட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள், இந்த விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் தென் மாவட்ட பயணிகள் மற்ற நகரங்களுக்கு செல்லாமல் எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று வருவதோடு தொழில்துறை, விவசாயத்துறை ஆகியவையும் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago