வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கண்காணிக்க பொதுப்பார்வையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படவுள்ளன. இதில், சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் நேற்று அய்வு செய்தார்.

6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பெட்டிகள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது எஸ்பி பி.தங்கதுரை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சி.சைபுதீன் (ஈரோடு மேற்கு), வாணி லெட்சுமி ஜெகதாம்மாள் (பவானி), இளங்கோவன் (அந்தியூர்) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்