திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கூடுதல் பேட்டரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத் தில், மொத்தமுள்ள (திருநெல்வேலி -408, அம்பாசமுத்திரம்-356, பாளையங்கோட்டை-389, நாங்குநேரி-395, இராதாபுரம்-376,) 1,924 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்காக 3,229 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,416 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,563 விவிபாட் இயந்திரங்கள் சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இந்த இயந்திரங்கள் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோல், கரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் கண்டறியும் கருவி, கைகழுவும் திரவம், முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கச் செல்ல உதவும் மடக்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை, அந்தந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு தேவையான கூடுதல் பேட்டரிகள், விவிபாட் இயந்திரங்களில் பொருத்து வதற்கான கூடுதல் காகிதங்களை ராமையன்பட்டியிலுள்ள சேமிப்பு கிட்டங்கியில் இருந்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago