தி.மலையில் வரும் 4-ம் தேதி காலை 8 மணிக்குள் - சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக : முன்னாள் படைவீரர்கள் ஆஜராக உத்தரவு :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் திரு வண்ணாமலை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள காவலர் மைதானத்தில் வரும் 4-ம் தேதி காலை ஆஜராகுமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில், சிறப்பு காவலர் களாக பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணியில் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகம் அருகே உள்ள காவலர் மைதானத்தில் வரும் 4-ம் தேதி காலை 8 மணியளவில் ஆஜராக வேண்டும்.

அப்போது. முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண் டும். மேலும், வரும் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை என 4 நாட்களுக்கு தேவை யான அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் உடை களை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்