பார்வையற்ற வாக்காளர்களுக்காக - பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு போஸ்டர் : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் கண் பார்வையற்ற வாக்காளர் களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு போஸ்டரை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று வெளியிட்டார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27,198 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 3,160 பேர் பார்வை திறன் அற்றவர்கள், 5,468 பேர் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் காது கேளாதவர்கள், 15,354 சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3,216 பிற வகை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கண் பார்வை யற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர் களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கு தேவையான வழிகாட்டும் போஸ்டரும் அச்சிடப்பட்டுள்ளது. இதனை, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று வெளியிடப் பட்டது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, “கண் பார்வையற்ற, காதுகேளாத மற்றும் சக்கர நாற்காலி பயன் படுத்தும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக, வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம் வசதி, குறியீட்டு பலகைகள், சைகை மொழி காணொலி காட்சியுடன் கூடிய பெரிய திரை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தும் இடம், தனி வரிசை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை விளக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறா மல் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதியில், மாற்றுத்திறனாளிகளுக்காக பயன் படுத்தப்பட உள்ள 1,400 சக்கர நாற்காலிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அகிலாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்