மோடியின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
விருதுநகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து நேற்று மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:
புண்ணிய பூமியான தமிழகம் சிறந்த கலாச்சாரம், பெருமையைக் கொண்டது. தமிழக கலாச்சாரத்தை உயர்த்திப் பேசி வருபவர் மோடி. வேலைவாய்ப்பு, இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் தலைவர். 60 ஆண்டுகால காங் கிரஸ் ஆட்சியில் நாட்டில் பல கிராமங்களுக்கு இன்னும் மின் சாரம் கூட கிடைக்கவில்லை.
ஆனால், ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வசதி கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் நிலையான, நேர் மையான, வலுவான ஆட்சி அமைய கூட்டணி அமைத்து உள்ளோம். விமான நிலையங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற தமிழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.
இதுபோன்ற கட் டமைப்புகளை உருவாக்க அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும்.
மோடியின் திட்டங்கள் தொட ர்ந்து கிடைக்க தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
திமுக, காங்கிரஸ் ஆட்சி பெண்களை இழிவுபடுத்துகிறது. இந்தத் தேர்தலில் தாய்மார்கள் அவர்களைத் தோற்கடிக்க வேண் டும். வாக்கு என்ற சக்தியை அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் சர்வதேச அளவிலான பல்கலைக் கழகம், விளையாட்டு மைதானம் மற்றும் இளைஞர்களுக்கு சர்வ தேச தரத்திலான விளையாட்டு பயிற்சி கிடைக்கவும் பிரதமர் மோடி இதைச் செயல்படுத்தவும் தமிழகத்தில் அதிமுக தலை மையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஒட்டுமொத்த பாரதத்துக்கும் செல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago