பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கட பிரியா தெரிவித் துள்ளது:
பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கு தலா 9 பறக்கும்படை குழுவினர், 9 நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் 2 வீடியோ கண்கா ணிப்பு குழுவினர் நியமிக்கப் பட்டுள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் இதுவரை 40 புகார் களும், குன்னம் தொகுதி யில் இதுவரை 17 புகார்களும் பெறப் பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் மூலமாக இது வரை 30 நபர்களிடமிருந்து ரூ.48,39,340 ரொக்கம், 185 மது பாட்டில்கள், 29 மப்ளர்கள், 1,474 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 16 நபர்களி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30,39,230 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சி யர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago