பெரம்பலூர் மாவட்ட - வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.வெங்கடபிரியா தெரிவித் துள்ளது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி) தொகுதியில் 9 வேட்பாளர்கள், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்களில் 3,02,692 வாக்கா ளர்கள் வாக்களிக்க உள்ளனர். குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடி மையங்களில் 2,73,461 வாக்காளர்கள் வாக் களிக்க உள்ளனர்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியில் பெரம்பலூர் தொகுதியில் 33 மேற்பார்வையாளர்கள், 161 பொறுப்பு அலுவலர்கள் மற்றும் 332 வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களும், குன்னம் தொகுதியில் 31 மேற்பார்வையாளரகள், 174 பொறுப்பு அலுவலர்கள் மற்றும் 320 வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.இவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங் கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளரின் பெயர், பாலினம், சட்டப்பேரவைத் தொகுதியின் பெயர், பாகம் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், வரிசை எண், மையத்தின் எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், வாக்காளர் அடையாள சீட்டின் பின்புறம் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் செல்போன் எண் இடம் பெற்றிருக்கும் என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்