7 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி அருகே மருதன்விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி கொலுசு, அரைஞான், மெட்டி போன்ற 7 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர்.

நகைக் கடைகளில் விற்பனைக் காக காரில் கொண்டு வந்த மதுரையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்