திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்.
ஏற்கெனவே 3 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். புதிதாக வந்துள்ளவர்கள் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 காவல் உட்கோட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.
அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ராணி பள்ளியில் அணிவகுப்பு நிறைவடைந்தது. வி.கே.புரம் காவல் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லிசா ஸ்டபிலா தெரஸ் தலைமையில் மறுகால்குறிச்சி பகுதியிலும், நாங்குநேரி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சேரன்மகாதேவி உட்கோட்டத் தில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் கொடி அணிவகுப்பு வீரவநல்லூர் பஜாரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் கொடி அணிவகுப்பு கூந்தன்குழி பாத்திமா நகர் பகுதியில் தொடங்கி சுனாமி காலனி, கூந்தன்குழி மூவரசர் ஆலயம் வழியாக பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.
இடிந்தகரை பகுதியிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருநெல்வேலி ஊரக உட்கோட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பர்கிட் மாநகரில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago