காவல்துறையினர் தபால்வாக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காவல்துறையினர் தங்கள் தபால் வாக்கை செலுத்தினர்.

பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் மேல் நிலைப்பள்ளியில் காவலர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு ந்தன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். மாநகர காவல் ஆணையர் அன்பு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: மாவட்டத்தில் 9-வது பட்டாலியன் போலீஸார் 195 பேர், 12-வது பட்டாலியனில் 29 பேர், மாவட்ட போலீஸார் 1,194 பேர், மாநகர போலீஸார் 1,033 பேர் என, மொத்தம் 2,451 பேர் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் வாக்களிக்க முடியாதவர்கள் நாளை (இன்று) வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்” என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் 1,584 பேர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தபால் வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது. தொகுதிக்கு ஓரிடம் வீதம் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங் குளத்திலும், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு புளியங்குடியிலும் தபால் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்களிக்க வர முடியாதவர்கள் இன்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 12 அறைகளில் 350 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தபால் வாக்குச் சீட்டு அடங்கிய உறை வழங்கப்பட்டது. வாக்குச் சீட்டில் வாக்களித்து, உறையில் வைத்து ஒட்டி, வாக்குப் பெட்டியில் போட்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் ஆய்வு செய்தார்.

மதுக்கடைகள் மூடல்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அரசா ணைப்படி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும், மே 2-ம் தேதியும் டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்