தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அரசின் 11 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக் களிக்கலாம்.
தமிழத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்களை காண்பித்து வாக்களிக்க முடியாது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதில், ஆதார் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவா ளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்ட அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை காண் பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்திலும் உள்ள வாக்காளர்கள் மேற்கண்ட 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago