சட்டப்பேரவைத் தேர்தல் நாளான வரும் 6-ம் தேதி தனியார், பொது நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் பொதுத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்ய அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
இதன்படி தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி முத்திரை ஆய்வாளர் - 9715366345, தொழிலாளர் துணை ஆய்வாளர் - 9944625051, தொழிலாளர் உதவி ஆணையர் - 8778431380ஆகியோரை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago