விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல்அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் வினோத்குமார், முகம்மது கைசர் அப்துல்ஹக், எம்.ஐ.பட் டேல், ரஞ்சிதா, காவல்துறை பொதுப்பார்வையாளர் பி.ஆர்.பண் டோர் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்த விவரம்:
நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தல் பொதுப்பார் வையாளர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளின்படி பணியாற்ற வேண்டும். தேர்தல் நுண்பார்வையாளர்கள் தங்களுடைய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை அவ்வப்போது தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பொதுப்பார்வை யாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலரின் அறிவுரையின்படி தேர்தல் பொதுப்பார்வை யாளர்களின் பயிற்சி வகுப்பு களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அனைத்து தேர்தல் நுண்பார்வையாளர்களும் தேர்தல் நாளுக்கு முந்தைய நாளோ அல்லது வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அனைத்து தேர்தல் நுண்பார்வையாளர்களும் தங்களதுவாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒன்றுக்கு அதிகமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களில் பணியமர்த்தக்கூடிய தேர்தல் நுண்பார்வையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் ரகசிய தன்மை,வாக்காளர்களுக்கு வாக்களித்தமைக்கான அழியாத மை வைக்கும் பணி மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் ஏதேனும் அசம் பாவிதங்கள் ஏற்படின் உடனடியாக அதுகுறித்த விவரங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் அனைவரும் நடுநிலையுடன் எவ்வித விருப்பு வெறுப்பின்றி தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago