திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் ஊடகங்களில் தேர்தல் தொடர் பான விளம்பரங்கள் வெளியிட விரும்பினால், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண் காணிப்பு குழுவில் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘2021 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செல வினங்களை கண்காணித்து அவற் றை வேட்பாளரின் செலவின கணக்கில் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணை யம் கடைபிடித்து வருகிறது.
நாளிதழ்கள், உள்ளூர் கேபிள்தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் வாயிலாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், அவர்களதுமுகவர்கள் வாக்கு சேகரிப் பதற்காக செய்யப்படும் விளம்பரங்களுக்கான முறயைான அனுமதி வழங்கவும், அந்த விளம்பரங்களை கண்காணித்து வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்க திருப்பத்தூர் மாவட்ட அளவில் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விளம்பர செல வினங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு முன்பு அனைத்து விதமான ஊடகங்களில் செய்யப்படும் தேர்தல் தொடர்பான பிரச்சார விளம்பரங்களை நிறுத் திக்கொள்ள வேண்டும் என அறி வுறுத்தியுள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி களில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தனியார் அமைப்பினர், தனி நபர் ஆகியோர் வரும் ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் தினசரி நாளிதழ்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
ஒரு வேளை விளம்பரம் செய்ய விரும்பினால் மாவட்ட ஊடக கண்காணிப்பு குழுவின் முறையான முன் அனுமதி பெற்ற பின்னர் விளம்பரத்தை வெளியிட வேண்டும். அதேபோல, வரும் ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நாளிதழ் நிறுவனங்கள் விளம்பரத்தை வெளியிட்டால் மாவட்ட ஊடக கண்காணிப்பு குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு, அந்த சான்றொப்பத்தில் உள்ள எண்ணையும் விளம்பரத்தில் சேர்த்து வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேரத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விளம்பர மாதிரிகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஒப்படைத்து முறையான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். விளம்பரங்களை வெளியிடும் செய்தி நிறுவனங் களும் இந்த நடை முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணை யத்தின் மேற்கண்ட உத்தரவுகளை அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அவர்களது முகவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மீறுவோர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago