ராணிப்பேட்டை, தி.மலை மாவட்டங்களில் - டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையும் மே 2-ம் தேதி ஆகிய 4 நாட்களில் மதுபான கடைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, டாஸ்மாக் மதுபான கடைகள் ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதியும் மூடியிருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் மதுபானம் விற்பனையோ அல்லது சட்டத்துக்கு புறம்பாக மதுபான பாட்டில் வைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித் துள்ளார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி ஆகிய நாட்களில் தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மது பானக் கடைகள், மதுக்கூடங்கள், எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ, எப்எல் 3ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் பெற்ற உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள், எப்எல் 4ஏ உட்பட அனைத்து மதுபான கடைகளில் விற்பனை நடைபெறாமல் மூடி வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்