தி.மலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வாகன சோதனையில் ரூ.1.96 கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் தலா 3 தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 31 நாட்களாக சோதனை நடைபெற்று வந்துள்ளது.
செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் (தனி) 7 பேரிடம் இருந்து ரூ.5,83,918-ம், தி.மலைசட்டப்பேரவைத் தொகுதியில் 39 பேரிடம் இருந்து ரூ.40,91,550-ம் மற்றும் 2 பேரிடம் இருந்து ரூ.2,49,032 மதிப்பிலான பாத்திரம் மற்றும் புடவைகள், கீழ் பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 35 பேரிடம் ரூ.29,16,891-ம் மற்றும் 5 பேரிடம் இருந்து ரூ.14,23,300 மதிப்பிலான 318 கிராம் தங்கம், அரிசி மூட்டைகள், மதுபாட்டில் கள், துணி பைகள், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 பேரிடம் இருந்து ரூ.8,47,354 -ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போளூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 20 பேரிடம் இருந்து ரூ.18,58,280-ம்மற்றும் 3 பேரிடம் இருந்து ரூ.23,400 மதிப்பிலான செல்போன், தங்கக்காசு, தேர்தல் துண்டு சீட்டுகள், சுவரொட்டிகள், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 8 பேரிடம் இருந்து ரூ.28,74,450-ம்,செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 11 பேரிடம் இருந்து ரூ.12,84,470-ம் மற்றும் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல், பட்டு ஜரிகை, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 57 பேரிடம் இருந்து ரூ.51,78,170-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும், 184 பேரிடம் 1 கோடியே 96 லட்சத்து 35 ஆயிரத்து 83 ரூபாய் மற்றும் 11 பேரிடம் இருந்து ரூ.17,05,732 மதிப்பிலான 318 கிராம் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த காரணத்தால் 127 பேரிடம் 1 கோடியே 23 லட்சத்து 84 ஆயிரத்து 835 ரூபாய் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 5 பேரிடம் ரூ.15,53,443 மதிப்பிலான பொருட்களும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago