நான்காவது மாடியில் பாதுகாப்பு அறை - தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் லிப்ட் வசதி ஏற்படுத்த உத்தரவு :

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிகமாக கூடுதல் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள் ஏற்படுத்தும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவிட்டார்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிவரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், பணியாளர்கள் செல்வதற் கான பாதை உள்ளிட்டவற்றை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை நான்காவது மாடியில் உள்ள பாதுகாப்பு அறை களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக கல்லூரியில் உள்ள மின்தூக்கிகள் மட்டுமின்றி தற்காலிக மின்தூக்கி வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தும்படி பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பணித்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்