செஞ்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாமக வேட்பாளர் புகார் :

By செய்திப்பிரிவு

செஞ்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக பாமக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

செஞ்சி தொகுதியில் திமுகவேட்பாளர் கே எஸ் மஸ்தானும், அதிமுக கூட்டணி சார்பில்பாமக வேட்பாளர் எம் பி எஸ் ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று செஞ்சி தொகுதி தேர்தல் பார்வையாளருக்கு பாமக வேட்பாளர் ராஜேந்திரன் புகார் மனுஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் அவர் கூறியி ருப்பதாவது,

செஞ்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் நெகருன்னிசா திமுக வேட்பாளர் மஸ்தானின் உறவினர் ஆவார். திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி, பணம் கொடுப்பது குறித்து புகார் தெரிவித்தபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை புகார் தெரிவிக்க செல்போனில் அழைத்தால் அழைப்பைஏற்பதில்லை.

ஆனால் வேறு எண்களில் அழைத்தால் அழைப்பை ஏற்று புகார் சொல்வதை கேட்கிறார். திமுக வேட்பாளரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 27-ம் தேதி இரவு 10.45 வரை பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருகிறார். .எனவே இவர்மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவர் இந்த புகார் நகலை தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் அனுப்பி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்