வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு பொருட்கள் : நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு கரோனா தடுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:

வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து வாக்களிக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,924 வாக்குச் சாவடிகளுக்கும் காய்ச்சல் கண்டறியும் கருவி, கைகழுவும் திரவம், முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

மாவட்டத்தில் 3,403 பேருக்கு தபால் வாக்குகளை நேரில் சென்று சேர்க்கும் பணிகளில் 109 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இக் குழுவினர் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு செய்து, வாக்கு சீட்டுகளை பாதுகாப்பு பெட்டிகளில் வைத்து,பாதுகாப்பாக கொண்டு வருவார்கள். மாவட்டத்தில் கரோனா நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) வரதராஜன், பல்நோக்கு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ஷர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத் தில் உள்ள 2,097 வாக்குச் சாவடிகளுக்கும் தேவைப்படும் முகக்கவசம், கையுறை, சானிடைஸர், முழு முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் ஆகியவை கூட்டுறவுத் துறை மூலம் வாங்கப்பட்டு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இப்பொருட்களை தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. இப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் ஆய்வு செய்தார். கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், துணைப் பதிவாளர்கள் ரவீந்திரன், சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்