ஏப்.7-ம் தேதி விடுப்பு அளிக்க ஜாக்டோ ஜியோ மனு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.பால்ராஜ் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் அளித்த மனு விவரம்:

அஞ்சலகத்தில் சென்று தபால் வாக்கு செலுத்துபவர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். கடந்த தேர்தல் வரை மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடைபெற்றன. தற்போது நான்கு கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. வரும் 3-ம் தேதி நடைபெறக்கூடிய பயிற்சி வகுப்பை ரத்து செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய திருநெல்வேலி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை வருவதால், அதை ஒட்டி புனித வெள்ளி மற்றும் புனித சனிக்கிழமைகளில் மத வழிபாடுகள் நடைபெறும். ஏப்ரல் 3-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றால், அவர்கள் கலந்துகொள்வதில் பல்வேறு சிரமம் ஏற்படும்.

ஏப்ரல் 5-ம் தேதி பயிற்சி மையத்திலிருந்து வாக்குச்சாவடி செல்வதற்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேபோன்று 6-ம் தேதி வாக்குப்பதிவு முழுமையாக நிறைவுபெற்ற பின்பு இல்லங்களுக்கு திரும்புவதற்கு வாகன வசதிசெய்து கொடுக்க வேண்டும். தேர்தல் பணியில் தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேல் ஈடுபடுவதால், வரும் 7-ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்