திருநெல்வேலியில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையின்போது ஒரு வேனில் ரூ.12.89 கோடிமதிப்பிலான நகைகள் இருந்தன. அவற்றுக்கான உரிய ஆவணங்கள் இருந்ததால், அவை பறிமுதல் செய்யப்படவில்லை.
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் 4 வழிச்சாலை மேம்பாலத்தின் கீழ்புறம் பறக்கும்படை வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று பகலில்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தஒரு வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில்ஏராளமான தங்க நகைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.12.89 கோடி என்பது தெரியவந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அந்த நகைகளை எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.
அதற்கான உரிய ஆவணங்களையும் காண்பித்தனர். இதனால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விசாரித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago