சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை அரசியல் ஆதாயத் துக்காக பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார் குற்றஞ் சாட்டினார்.
திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து பொன்.குமார் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 17 வகையான நலவாரி யங்கள் அமைக்கப்பட்டு சரியாக செயல்பட்டது.
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக, நல வாரியங்கள் முடங்கிக் கிடக்கின்றன. கட்டுமானத் தொழில் என்பது, நாட்டின் கட்டமைப்பு பணிகளை மேற் கொள்ளக்கூடியது. சாலைகள், மேம்பாலங்கள், விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிலும் கட்டுமானத் துறை உள்ளது. விவசாயத்துக்குஅடுத்தப்படியாக வேலைவாய்ப்பு கொடுக் கக்கூடியது கட்டுமானத் துறை.
திமுக ஆட்சியில் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்ட சிமென்ட் மூட்டை, இப்போது ரூ.460-க்கும் மற்றும் ரூ.30 ஆயிரம் விற்பனையான 1 டன் கம்பி விலை ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கட்டுமானத் தொழில் முடங்கி கிடக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப் படவில்லை. தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகள், அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வேலை கேட்டு பதிவு செய்த ஒரு கோடி இளை ஞர்கள் காத்திருக்கின்றனர்.
திமுக அணியின் மகத்தான வெற்றி பெறும் என்பதால், திமுக முன்னணித் தலைவர்களை சோர்வடைய செய்ய வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. தி.மலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய் யும்போது, முன்னாள் அமைச் சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தினர். இதன்மூலம் அரசு நிர்வாகத்தை அரசியலுக்காக மோடி அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். மாநில தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள் அல்லது சிபிஐ, வருமான வரித்துறையை பயன்படுத்துவது என்பது வாடிக் கையானது.
இதையெல்லாம் பார்த்து திமுகவும் மற்றும் தமிழக மக்களும் அஞ்சிவிட போவதில்லை. சட்டப் பேரவைத் தேர்தல் என்பது தெளி வான வெற்றியை தர இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago