டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகள் என்று கருதப்படும் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டு நர்கள், நடத்துநர்கள், தங்கும் விடுதிகளின் உரிமை யாளர்கள், பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதிக நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத் தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எந்தவித பக்க விளைவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதை தடுக்க அவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 116 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலூர் டாஸ்மாக் மாவட்ட அலுவ லகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்