திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் இருந்து தபால் வாக்கும் பெறும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத் தார்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தபால் முறையில் வாக்களிக்க 8,530 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களது வீடு தேடி சென்று தபால் வாக்கு களை பெறும் பணி நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சானானந்தல் கிராமத்தில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 81 வயது மூதாட்டியின் வீட்டுக்கு சென்று தபால் வாக்கை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இதையடுத்து, தபால் வாக்கு படிவத்தை பூர்த்தி செய்து ஆட்சியர் முன்னிலையில், தபால் வாக்கு பெட்டியில், தனது வாக்கை மூதாட்டி நூருன்பீ செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, சானானந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.12.47 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி வாக்காளர் களுக்கான சிறப்பு வசதியுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி அமைக்கும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago