மதுரையில் மூளைச்சாவு அடை ந்த பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப் பட்டதால் 6 பேர் மறு வாழ்வு பெற்றனர்.
மதுரை கான்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.நாகராஜன் (53). அனுப்பானடியில் பால் பண்ணை நடத்தி வந்தார். இவர் மார்ச் 22-ம் தேதி இரவில் பால் பண்ணையில் இருந்து வீட்டு க்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சரக்கு வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலை யில் கடந்த 25-ல் மூளை ச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் சம்மதித்தனர்.
அரசிடம் உடனடியாக அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து மருத் துவக் குழுவினர் 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து நாகராஜனின் உடல் உறுப்புகளை அகற்றினர்.
அதில் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளி களுக்கு பொருத்தப்பட்டன.
மற்றொரு சிறுநீரகம் கோவை யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், நுரையீரல் சென் னையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. நாகராஜன் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago