புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6-ம் தேதி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளர் களுக்கு கரோனா தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள 3,804 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர் என ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை நகர்மன்ற வளா கத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ள கரோனா தடுப்பு உபகரணங்களை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட உள்ள 1,902 வாக்குச் சாவடிகளில் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். வாக்குப் பதிவு நாளில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கை கழுவும் திரவம், தெர்மல் ஸ்கேனர், பாலித் தீன் கையுறைகள், முகக்கவசம், கழிவுகள் சேமிக்கும் தொட்டி உட்பட 11 வகையான கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
தேர்தல் நாளன்று 4 மணி நேரத்துக்கு 1 முறை வாக்குச்சாவடியில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களை பரி சோதிக்க, கையுறை மற்றும் முகக்கவசம் வழங்குதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாக்குச்சாவடிக்கு தலா 2 பேர் வீதம் 3,804 தன்னார்வலர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
புதுக்கோட்டை சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago