களக்காட்டில் 32 மி.மீ. மழைப்பதிவு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 32.4 மி.மீ. மழை பதிவானது. மூலக்கரைப்பட்டியில் 30 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 17 மி.மீ., சேர்வலாறில் 11 மி.மீ., பாளையங்கோட்டையில் 10 மி.மீ., மணிமுத்தாறில் 9 மி.மீ., பாபநாசம், திருநெல்வேலியில் தலா 7 மி.மீ., நம்பியாறு அணையில் 4 மி.மீ., சேரன்மகாதேவியில் 2 மி.மீ., நாங்குநேரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

அணைகள் நிலவரம்

பாபநாசம் அணை நீர்மட்டம் 110.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 270 கனஅடி நீர் வந்தது. 605 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.24 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 26 கனஅடி நீர் வந்தது. 445 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 44.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.05 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 9.25 அடியாகவும் இருந்தது.

தென்காசி

ராமநதி அணையில் 15 மி.மீ., தென்காசியில் 10.2 மி.மீ., ஆய்க்குடியில் 6.4 மி.மீ., குண்டாறு அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனா நதி அணை நீர்மட்டம் 71.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67.75 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்