திருப்பத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.22 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை யினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன் னிட்டு வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்பிரபாகர் என்பவர் தனது காரில் வந்தார்.
அந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் ரூ.1 லட்சம் பணம் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப் படைத்தனர்.
அதேபோல, குரிசிலாப்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை யினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதேபகுதி யைச் சேர்ந்த அன்பு என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் அவ் வழியாக வந்தார். அவரை, நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 53 ஆயிரத்து 900 ரூபாய் இருப்பதும், அதற்கான ஆவணங் கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகேயுள்ள மானவள்ளி கிராமம் அருகே பெங்களூரு - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் தனது மனைவி சவுமியாவுடன் காரில் வந்தார்.
அந்த காரை வழிமடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை யிட்டபோது அவர்களிடம் ஆவணங்கள் இல்லாமல் 68 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட கருவூல அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago