மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் :

By செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே மயிலம் முரு கன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.

மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 19-ம் தேதி கொடியேற் றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணமும், வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடை பெற்றது.

பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் வடம்பிடித்து தேரை தொடக்கி வைத்தார். அப்போது முருகனுக்கு அரோகரா, அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

பங்குனி உத்திர திருவிழா வையொட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக அலகு குத்தியும், காவடி ஏந்தியும் மலையேறினர். இரவு முத்து விமான உற்சவம் நடைபெற்றது.

இன்று காலை பங்குனி உத்திரம், தீர்த்தவாரி உற்ச வமும், இரவு தெப்பல் உற் சவமும் நடைபெறுகிறது. நாளைஇரவு முத்துப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள் (30ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்