நெய்வேலி தொகுதி திமுக வேட் பாளர் தொகுதிக்கு உட்பட்ட பகு திகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நெய்வேலி திமுக வேட்பாளர் சபாராஜேந்திரன் வடக்குத்து ஊராட்சி உள்ள தில்லை நகர், பெரியார் நகர், ராம் நகர்,எஸ்.பி.டி.மணி நகர், ரெயின்போ நகர், அசோக் நகர், சக்தி நகர்,கே.எஸ்.கே.நகர்,சீனிவாச நகர், அருள்பெருஞ்ஜோதி நகர், பெருமத்தூர் ஊராட்சி, வட்டம் -4, 7 இல் உள்ள சிலோன் குடியிருப்பு, மாற்று குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது வேட்பா ளர் சபாராஜேந்திரன் பேசியது:
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், முதியோர்களுக்கு கூடுதலாக உதவித்தொகை, நியாய விலை பொருட்கள் வாங்கும் குடும்ப தலைவிகளுக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்பட நீங்கள் அனைவரும் திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். நெய்வேலி என்எல்சி மாற்று குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா பெற்றுத்தரப்படும். தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். குறிப்பாக சிலோன் குடியிருப்பு பொது மக்களுக்கு ரெப்கோ வங்கி அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடக்குத்து ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் அவசர காலங்களில் மருத்துவம் தேவைப்படுவோர் இங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலை வில் குறிஞ்சிப்பாடி, வடலூர் அழைத்துச் செல்லபடுவது தவிர்க்கப்படும். அவ்வாறு கொண்டு செல்லும்போது ஏற்படும் காலதாமதம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும். இதனை எனது முதல் கடமையாக எண்ணி நிறைவேற்றித் தருவேன் என்றார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago