புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு நேற்று இரவு வாக்கு சேகரித்து கீரமங்கலத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
கரோனா காலத்தில் தமிழக அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமும் இல்லை என்றால் தமிழகத்தில் பல குடும்பங்கள் பட்டினியால் அவதிப்பட்டு இருக்கும்.
தமிழகத்தில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆலங்குடி தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு அதிமுகவில் ஒரு தொண்டர் கூடவா கிடைக்கவில்லை. 60 நாட்களுக்குமுன் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர், தற்போது இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago