பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி மேலப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த பல ஆண்டுகளாக இங்கு தேர்வு செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களால் தொகுதி போதுமான வளர்ச்சி அடையவில்லை. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள எஸ்டிபிஐ வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் புஹாரி சேட், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மின்னதுல்லா, தொழிற்சங்க மாவட்ட தலைவர் சலீம்தீன், செயலாளர் செய்து மைதீன், பொருளாளர் சுல்தான் பாஷா பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago