கருப்பு பணம் வைத்திருப்பதால் எ.வ.வேலு கவலைப்படுகிறார் : பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி விமர்சனம்

By செய்திப்பிரிவு

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருப்பதால் வருமான வரித் துறை பற்றி கவலைப்படுகிறார் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் பழனி சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப் பாக செயல்படுகின்றனர்.

வன்னியர் இடஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கோரிக் கையை நிறைவேற்றியது வெற்றிக்கு வழி வகுக்கும். திமுக தேர்தல் அறிக்கையைவிட அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின் வெட்டு தொடரும். நாம், அவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வர விடாமல் தடுக்க வேண்டும்.

திமுக என்றால் ஊழல்

திமுக என்பது வாரிசு, ஊழல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து. அவர்கள் வாரிசு அரசியல் செய் கின்றனர். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாகும். அந்த கட்சியின் 50 சதவீத பங்குகளை கருணாநிதி குடும்பத்தினரிடம், 5 சதவீத பங்குகளை எ.வ.வேலு, ஜெகத் ரட்சகன் போன்ற தலைவர்களிடம் உள்ளது. ஆனால் பாஜக, அதிமுக, பாமக மற்றும் தமாகாவுக்கு மக்கள் நலன்தான் முக்கியம்.

உண்மையான நண்பர் யார்?

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக, பிரதமர் மோடி அரசாங்கம், ரூ.6.10 லட்சம் கோடியை வழங்கி உள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 48 லட்சம் குடும்பங்களுக்கு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன. 42 லட்சம் விவசாய குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று வருகின்றனர்.

தமிழக மக்கள் கட்டப்பஞ் சாயத்து, நில அபகரிப்பை விரும்பவில்லை. ஆனால், திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பை செய்பவர்கள். பாஜகவினரை அதிமுக அமைச்சர்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் அவர்களை ஆதரிக்கின் றோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவர்கள் வரவேற்கின்றனர். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருப்பதால், வருமான வரித் துறை சோதனையை பற்றி கவலைப்படுகிறார்.

கலாச்சாரம் என்றால் என்ன?

தமிழ் கடவுள் முருகனை இழிவுப்படுத்தியபோது திமுக அமைதியாக இருந்தது. இதற்கு, கண்டனம் தெரிவித்து பாஜக நடத்திய வேல் யாத்திரை வெற்றி பெற்றதும், இப்போது இந்து கடவுளின் பக்தர்கள் என்பதுபோல் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள திராவிட கழக தலைவர் வீரமணி உள்ளிட்டவர்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்தினர். இதுதான் தமிழ் கலாச்சாரமா? விபூதி குங்குமம் என்பது தமிழ் கலாச்சாரம். தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரி யார்? என மக்களுக்கு தெரியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்