வேலூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள 733 காவல் துறையினருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 648 பள்ளிகளில் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 8,560 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பயிற்சியும் நிறைவு பெற்றுள்ளது. இன்று இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காவல் துறை யினரையும் வாக்குச்சாவடி வாரியாக பணி நியமனம் செய்யும் பணி நேற்று கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட காவல்துறை பார்வை யாளர் மயாங்க் வஸ்தவா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என சுமார் 733 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago