திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 13,808 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். அவர் களுக்கான, 2-ம் கட்ட பயிற்சி முகாம் தி.மலை மாவட்டத்தில் 8 இடங்களில் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “வாக்குச்சாவடிகளில் பணி யாற்றும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பயிற்சி கையேட்டில், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள், படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தவறுகளுக்கு வாக்குப்பதிவு அலுவலர் தலைமையிலான குழுவினரே பொறுப்பு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், மண்டல அலு வலர்களுக்கு தகவல் தெரிவித்து, புதிய இயந்திரத்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு வழி முறைகளை கடைபிடிக்க, சுகா தாரத் துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம், வாக் காளர்கள் உட்பட அனைவருக் கும் முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும். வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பாது காப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
அப்போது, தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோர் டோங்க்ரே, முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர். பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் பெறப் பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago