தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு உழவர் பேரவை கோரிக்கை

By செய்திப்பிரிவு

தென்பெண்ணை–பாலாறு இணைப்பு திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உழவர் பேரவை வலி யுறுத்தியுள்ளது.

உழவர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மலையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித் தார். நிர்வாகிகள் பத்மநாபன், தங்கராஜ், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், “வேளாண் உற்பத்தி வருமானத்தை குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.64 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும், மாநில அளவில் ஒரு லட்சம் டன் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை கொள் முதல் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளின் குடும்பத்துக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசின் கட்டுமானப் பணிகளை அரசே ஏற்று நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கிராம சபை ஒப்புதல் பெற்ற பிறகு அரசின் கட்டுமானப் பணியை மேற்கொள்ள வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டும்.

உழவு கருவிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் எத்தனால் மற்றும் டீசல் வழங்க வேண்டும். விவசாய குடும்பத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.3 லட்சம் மற்றும் விபத்து மரணத்துக்கு ரூ.10 லட்சத்தை உழவர் பாது காப்புத் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆறுகளில் 5 கி.மீ., தொலைவுக்கு தடுப்பணை கட்ட வேண்டும்” ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்