நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வீடியோ விளம்பர ஒளிபரப்பிற்கு அனுமதி பெற ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பிரச்சார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இம்மையத்தின் பணிகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேவ் பிரகாஷ் பாமநாவத், அஜய் சிங், சாமுவேல் பிட்டா ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது அங்குள்ள பதிவேடுகளில் உள்ள தகவல் களின்படி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்திகளின் விவரம், அதற்கான வீடியோ பதிவுகள் தொகுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago