தி.மலை அருகே தனியார் பேருந் தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.30 லட்சத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தி.மலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், தி.மலை – கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் அரசுடையாம்பட்டு கிராமத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த பேருந்தில் பயணம் செய்த தண்டராம்பட்டு அடுத்த பெருந்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரிடம் ரூ.2.30 லட்சம் இருந்துள்ளது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து ரூ.2.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ,அந்த தொகையை, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோர் டோங்க்ரேவிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago