ராணிப்பேட்டை மாவட்டத்தில் - ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினசரி விநியோகம் செய்யப் படும் 16 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்ய உள்ளனர்.

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பால் பாக்கெட்டுகள் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து தினசரி 1.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 62 ஆயிரம் லிட்டர் பால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், திருவண்ணா மலை மாவட்டத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக அனுப்பப்படுகிறது. மேலும், 54 ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைப்பதுடன் மீதமுள்ள பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் தினசரி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தேர்தல் நேரம் என்பதால் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய பால் பாக்கெட்டுகள் மீது ‘100 சதவீதம் வாக்களிப்பீர், வாக்காளிப்பது நமது கடமை’ என்ற வாசகம் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்